குமரி இன்ஜினியர் மாரடைப்பால் மஸ்கட்டில் மரணம்

கன்னியாகுமரி;

Update: 2025-06-21 12:39 GMT
கன்னியாகுமரி மாவட்டம் மாதவலாயத்தை சேர்ந்த ஹபீப் முஹம்மத் ஹாரிஸ் (வயது 32) என்ற இளைஞர், ஓமான் நாட்டின் மஸ்கட்டில் இன்ஜினியராக வேலை பார்த்து வந்தார். குடும்பத்துடன் அங்கு வசித்து வந்த நிலையில் நேற்று காலை மாரடைப்பால் மரணமடைந்தார். இவர், குமரி மாவட்டத்தில் ஓய்வு பெற்ற விவசாய இயக்குனராக பணியாற்றிய ஹபீப் முஹம்மத்தின் மகன் ஆவார். திருமணமான இவருக்கு நான்கு வயது பெண் குழந்தை உள்ளார். குடும்பத்தோடு மஸ்கட்டில் வசித்து வந்த ஹாரிஸ், வரும் 25 ஆம் தேதி சொந்த ஊருக்கு திரும்ப திட்டமிட்டு இருந்தார். இவரது மரணம் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடலை சொந்த ஊரான மாதவலாயத்திற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

Similar News