தனியார் பள்ளியில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது

உலக யோகா தினத்தை முன்னிட்டு தனியார் பள்ளியில் யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றது;

Update: 2025-06-21 13:51 GMT
பள்ளிபாளையம் ஈரோடு சாலையில் அமைந்துள்ள நந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 11-வது சர்வதேச யோகா தினம நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளி முதல்வர் I. ராஜேஷ் வரவேற்புரை ஆற்றினார்.பள்ளியின் தலைவர் மற்றும் தாளாளர் C.N ராஜா அவர்கள் யோகாவின் வரலாறு மற்றும் சிறப்பு பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். மற்றும் பள்ளியின் செயலர் நந்தி C. மோகன் அவர்கள் யோகாவின் முக்கியத்துவம் பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். நூற்றுக்கும் அதிகமான மாணவர்களைக் கொண்டு யோகா பயிற்றுநர் N.சேகர் , அறிவியல் ஆசிரியர் P.K.கிருஷ்ணவேணி ஆகியோரின் வழிகாட்டுதல் படி யோகாசனங்கள் செய்யப்பட்டன. சமூக அறிவியல் ஆசிரியை T.வித்யா நன்றியுரை வழங்கினார். இவ்விழாவில் 600 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

Similar News