அத்தனூர் பேரூராட்சி பகுதி முழுவதும் அதிமுக சார்பில் துண்டு பிரசுரம்..

அத்தனூர் பேரூராட்சி பகுதி முழுவதும் அதிமுக சார்பில் துண்டு பிரசுரம்..;

Update: 2025-06-21 14:30 GMT
கழகப் பொதுச் செயலாளர் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க கடந்த பத்தாண்டு கால அஇஅதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட நல்ல திட்டங்களை விளக்கியும், கடந்த நான்கு ஆண்டுகால விடியா திமுக ஆட்சியின் அவல நிலைகள், சட்ட ஒழுங்கு சீர்கேடு, போதை பொருள் விற்பனை, பெண்களுக்கு பாதுகாப்பின்மை ஆகியவைகளை விளக்கியும் அச்சிடப்பட்ட துண்டு பிரசுரங்களை நாமக்கல் மாவட்ட அம்மா பேரவையின் சார்பில் இராசிபுரம் சட்டமன்ற தொகுதி வெண்ணந்தூர் கிழக்கு ஒன்றியம், அத்தனூர் பேரூராட்சி பகுதி முழுவதும் வீடு வீடாக சென்றும் மேலும் கடைகள் உள்ளிட்ட பகுதிகளில் வழங்கப்பட்டது. இதில் அதிமுக கழக அமைப்புச் செயலாளரும் நாமக்கல் மாவட்ட கழக செயலாளர் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான பி. தங்கமணி கலந்து கொண்டு துண்டு பிரசுரங்களை அனைவரிடத்திலும் வழங்கினார். நாமக்கல் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் இ.ஆர் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அதிமுக கழக மகளிர் அணி இணை இணைச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டாக்டர் வெ. சரோஜா, மாவட்ட கழக அவைத் தலைவர் எஸ்‌. பி கந்தசாமி, வெண்ணந்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் எஸ். பி தாமோதரன், மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் ராஜா, அத்தனூர் பேரூர் கழக செயலாளர் செழியன், மாவட்ட வர்த்தக அணி இணைச் செயலாளர் ஆர். பிரகாசம், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட துணைச் செயலாளர் என். கே. தினகர், வெண்ணந்தூர் கிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வெங்கடாசலம், புரட்சித்தலைவி அம்மா பேரவை மாவட்ட தலைவர் இ. ஆர்.இ.குமரேசன், மகளிர் அணியினர் ராதா சந்திரசேகரன், ஹேமலதா, சரோஜினி, வெண்ணந்தூர் பேரூர் கழக செயலாளர் செல்வம், பட்டணம் பேரு கழக செயலாளர் பாலசுப்பிரமணியம் உட்பட ஏராளமான கழக நிர்வாகிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Similar News