யோகா தின விழா
இலாடபுரம் அரசு ஆதி திராவிடர் நல உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்ச் செம்மல், நல்லாசிரியர், முனைவர் மாயக்கிருட்டினன். சிறப்புரையாற்றினார்.;
பெரம்பலூர் மாவட்டம் இலாடபுரம் MRV மேனிலைப்பள்ளியில் இலக்கிய மன்ற துவக்க விழா நடைபெற்றது. நிர்வாக இயக்குநர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். நிர்வாக இயக்குநர்கள் நாகமணி பாஸ்கர் முன்னிலை வகித்தனர். இலாடபுரம் அரசு ஆதி திராவிடர் நல உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்ச் செம்மல், நல்லாசிரியர், முனைவர் மாயக்கிருட்டினன். சிறப்புரையாற்றினார். கல்வியின் முக்கியத்துவம் பற்றியும், கல்வியாளர்கள், சாதனையாளர்கள் பற்றியும் குறிப்பிட்டார். மாதா பிதா குரு தெய்வம் வாழ்வில் போற்ற வேண்டியவர்கள். சங்க இலக்கியம் முதல் இக்கால இலக்கியம் வரை பரிமாற்றங்களை விளக்கினார். சமூகமாற்றத்திற்கு கல்வியே அடிப்படை என்பதை விளக்கினார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். நிர்வாக இயக்குநர் அம்பிகாபதி வர வேற்றார். ஆசிரியை தேன்மொழி நன்றி கூறினார். ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். யோகா தின விழா கொண்டாடப்பட்டது. பேராசிரியர்கள் இராஜா, உமா, பூமா யோகா பயிற்சி அளித்தனர்.