கோவை: பாதுகாப்புப் படை வீரர்களுக்கு யோகப் பயிற்சி !
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, கோவை ஆதியோகி வளாகத்தில் நேற்று பாதுகாப்புப் படை வீரர்களுக்காக சிறப்பு யோகப் பயிற்சிகள் நடைபெற்றன.;
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, கோவை ஆதியோகி வளாகத்தில் நேற்று பாதுகாப்புப் படை வீரர்களுக்காக சிறப்பு யோகப் பயிற்சிகள் நடைபெற்றன. இதில் வெள்ளலூர் அதிவிரைவு படை, மதுக்கரை 35-வது ரெஜிமெண்ட், சூலூர் 43-வது ரெஜிமெண்ட் ஆகியவற்றை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். ஈஷா நிறுவனம் நாடு முழுவதும் நடத்திய 2,500-க்கும் மேற்பட்ட இலவச யோக வகுப்புகளில், பாதுகாப்புப் படை வீரர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட 10,000-க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இந்த வகுப்புகள் 11,000-க்கும் என மேற்பட்ட யோக வீரா தன்னார்வலர்களால் நடத்தப்பட்டது.