பள்ளி மாணவர்களோடு யோகா தினம் கொண்டாடிய எஸ்பி வேலுமணி !
உலக யோகா தினத்தை முன்னிட்டு, கோவை மதுக்கரையில் உள்ள பிருந்தாவன் வித்யாலயா பப்ளிக் பள்ளியில் மாணவர்கள் பல்வேறு யோகாசனங்களை செய்து திறமையை வெளிப்படுத்தினர்.;
உலக யோகா தினத்தை முன்னிட்டு, கோவை மதுக்கரையில் உள்ள பிருந்தாவன் வித்யாலயா பப்ளிக் பள்ளியில் மாணவர்கள் பல்வேறு யோகாசனங்களை செய்து திறமையை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் பள்ளி தாளாளர் வசந்தராஜன் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். இந்த நிகழ்வில் பேசும் போது எஸ்.பி. வேலுமணி, இளைஞர்கள் போதைப்பொருள் பழக்கத்தில் அதிகம் சிக்கியுள்ளதை எச்சரித்து, அதனை தடுக்க அரசு செயல்படவில்லை என குற்றம்சாட்டினார். இதற்கான ஒரே தீர்வு ஆட்சி மாற்றம் என்றும் அவர் கூறினார். வசந்தராஜன், யோகாவின் முக்கியத்துவத்தை உலகளவில் கொண்டு சென்றதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டுத் தெரிவித்தார். மேலும், அரசு பள்ளி மாணவர்களுக்கும், குறிப்பாக பெண்களுக்கும், யோகா பற்றிய விழிப்புணர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.