கோவை: சிறுமியை தாக்கிய சிறுத்தை - உடல் மீட்பு !

வால்பாறையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை இழுத்துச் சென்ற சம்பவத்தில் சிறுமியின் உடல் மீட்பு.;

Update: 2025-06-22 03:11 GMT
வால்பாறை அருகே பச்சமலை எஸ்டேட் பகுதியில், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி தம்பதியரின் 7 வயது மகள் ரோசினியை, விளையாடிக் கொண்டிருந்தபோது சிறுத்தை ஒன்று திடீரென தாக்கி, கவ்விச் சென்று விட்டது. தாயின் கண் முன்னே நடந்த இந்த கொடூர சம்பவம் அப்பகுதியை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தகவல் அறிந்து வந்த காவல் மற்றும் வனத்துறையினர், மோப்ப நாய்கள் உதவியுடன் தேடுதல் நடவடிக்கையை தீவிரமாக முன்னெடுத்தனர். நேற்று சிறுமி விளையாடிக்கொண்டிருந்த இடத்திலிருந்து 300 மீட்டர் தொலைவில் உள்ள யூகலிப்டஸ் காட்டில் சிறுமியின் சிதைந்த உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. உடல் பகுதி பிரேத பரிசோதனைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பகுதியில் பெரும் அதிர்ச்சி மற்றும் பாதுகாப்பு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Similar News