அருவிக்கரை ஆற்றில் படையெடுக்கும் யுடியூபர்கள்
கிரிக்கெட் வீரர் அஸ்வின் குளித்ததால்;
குமரி மாவட்டம் அருவிககரைப் பகுதியில் பரளியாற்றில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வின் குளிக்க வந்துள்ளார். அது தடை செய்யப்பட்ட பகுதியாகும். ஆபத்தான பகுதியில் நண்பர்கள் புடைசூழ அஸ்வின் குளிக்கும் புகைப்படம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. கடந்த இரு நாட்களாக அருவியின் அழகை படம்பிடிப்பதற்காக கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த யுடியூபர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் அதிக அளவில் போலீஸ் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து போலீசார் கூறுகையில், - அருவிக்கரை பகுதியில் வருடம் தோறும் 10 பேராவது வெளியூர் சுற்ற பயணிகள் சறுக்கி விழுந்து உயிரிழந்து வருவது வழக்கம். ஆனால் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கிரிக்கெட் வீரர் தன் நண்பருடன் வந்து குளிக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியாகி வைரல் ஆகி வருகிறது. தற்போது பலர் இங்கு படம்பிடித்து செல்கின்றனர். ஆபத்தான பாறைகளில் சென்று குளிக்க வேண்டாம் என அறிவுறுத்தி வருகிறோம். என்று கூறினார்கள். அருவி கரை பகுதி கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் வெளியான வருஷம் 16 என்ற தமிழ் சினிமா படம் அந்த பகுதியில் தான் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அதன் பின்னர் அருவிக்கரையை பார்க்க பல சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். ஆனால் பாதுகாப்பு இல்லாத பாறைகளில் ஏறி போட்டோ எடுக்கும் போது பல சுற்றுலா பயணிகள் சறுக்கி விழுந்து உயிரிழக்க நேரிடும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.