தா.பழூர் அருகே கொள்ளிடம் ஆற்று பாலத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் இறந்த நிலையில் மீட்பு

கொள்ளிடம் ஆற்று பாலத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் இறந்த நிலையில் மீட்கப்பட்டார்;

Update: 2025-06-22 05:49 GMT
அரியலூர், ஜூன் 22- அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே அரியலூர் தஞ்சாவூர் மாவட்டத்தை இணைக்கும் வகையில் அமைந்துள்ள மதனத்தூர் நீலத்தநல்லூர் கொள்ளிடம் ஆற்று பாலத்தில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.இதனை பார்த்த அந்த வழியாக சென்ற வழிப்போக்கர்கள் சிலர் அருகில் உள்ள அரியலூர் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள போலீஸ் சோதனை சாவடியில் தகவல் தெரிவித்தனர்.இதனை அடுத்து தா.பழூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த நபரின் பிரேதத்தை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் இறந்த நபர் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியைச் சேர்ந்த பிச்சையப்பன் மகன் முத்து (30) என்பது தெரிய வந்தது. இவர் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் பல்வேறு பகுதிகளில் சுற்றி திரிந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தா.பழூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News