விஜய் பிறந்த நாள்- பொதுமக்களுக்கு தலைகவசம்,சீருடை வழங்கிய தவெக நிர்வாகிகள்.
விஜய் பிறந்த நாள்- பொதுமக்களுக்கு தலைகவசம்,சீருடை வழங்கிய தவெக நிர்வாகிகள்.;
விஜய் பிறந்த நாள்- பொதுமக்களுக்கு தலைகவசம்,சீருடை வழங்கிய தவெக நிர்வாகிகள். தவெக தலைவரும், நடிகருமான விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மேற்கு மாவட்ட தவெக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வுகள் கரூர் மாவட்டம் முழுவதும் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தவெகவினர் பலரும் கலந்து கொண்டு பேருந்து நிலையம் அருகே சாலையில் தலைகவசம் அணியாமல் சென்ற இரு சக்கர வாகன ஓட்டிகள் 51 பேருக்கு தலைகவசம் வழங்கினர். தலைக்கவசம் பெற்றுக் கொண்ட வாகன ஓட்டிகள் தவெக நிர்வாகிகளுக்கு கரம் கூப்பி நன்றி தெரிவித்தனர். அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். தொடர்ந்து லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் உள்ள ஆட்டோ ஸ்டேண்டில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடைகள், பிரியாணி, தண்ணீர் பாட்டிலுடன் இனிப்புகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.