மூதாட்டி கழுத்தை நிறுத்திக் கொலை

வெப்படை அடுத்துள்ள பாதரையில் நகைக்காக மூதாட்டி கொலை. உள்பக்கமாக தாழிட்டு கொலை செய்த குற்றவாளியை உறவினர்களே கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்ததால் பரபரப்பு;

Update: 2025-06-22 15:40 GMT
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள பாதரை மாரியம்மன் கோவில் குடி தெரு பகுதியில் தனியே வசித்து வருபவர் கண்ணம்மாள் (80). இவருக்கு இரண்டு மகன்களுள், ஒருவர் இறந்துவிட்ட நிலையில், மற்றொரு மகன் இவரது வீட்டின் அருகில் வசித்து வருகின்றார். தனியார் நூற்பாலையில் கூலித்தொழிலாளியாக பணிபுரிந்து வரும் ராசிபுரம் அத்தனூர் பகுதியை சேர்ந்த சங்கர் என்பவர் இவர்களது வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். மூதாட்டியின் மகன் மற்றும் உறவினர்கள் அனைவரும் மருதமலை கோவிலுக்கு சென்று இருந்த நிலையில், வீட்டில் மூதாட்டி மட்டும் தனியாக இருந்துள்ளார். இவர் இன்று மதியம் சுமார் 3.30 மணியளவில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பொழுது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தை பயன்படுத்தி வீட்டிற்குள் நுழைந்த சங்கர் அவரது நகையினை பறிக்கும் நோக்கில், மூதாட்டியின் வாயில் புகையிலை மற்றும் துணியை நுழைத்து கழுத்து நெரித்து கொலை செய்துள்ளார். இந்நிலையில் கோவிலுக்கு சென்று இருந்த உறவினர்கள் மீண்டும் வந்து மூதாட்டி இடம் இருந்த வீட்டு சாவியினை பெற்றுக்கொள்ள அவரது வீட்டிற்கு சென்று பார்த்த போது உள் பக்கமாக கதவு தாளிடப்பட்டிருந்தது. நீண்ட நேரமாக அழைத்தும் மூதாட்டி வராததால் கதவின் சந்தின் வழியாக உள்ளே பார்த்தபோது ஷங்கர் மூதாட்டியின் வாயில் துணியை வைத்து நுழைத்துக் கொண்டிருந்ததை பார்த்ததும், உறவினர்கள் கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து உள்ளே சென்று பார்த்தபோது ஷங்கர் மூதாட்டியை கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெப்படை போலீசார் சங்கரை கைது செய்ததோடு, அவரிடம் இருந்து சுமார் முக்கால் பவுன் மதிப்பிலான தோடு மற்றும் மோதிரத்தை பறிமுதல் செய்தனர். மேலும் கண்ணம்மாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருச்செங்கோடு டி.எஸ்.பி கிருஷ்ணன் சம்பவம் குறித்து விசாரணையை மேற்கொண்டு வருகிறார் . வீட்டில் வாடகைக்கு குடியிருந்த நபர் மூதாட்டியை நகைக்காக கொலை செய்த சம்பவம் வெப்படை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News