கோவை: செல்க்கரசல் கிராமத்தில் சோழர் கல்வெட்டுகள் கண்டெடுப்பு !

சோழர் காலத்து கல்வெட்டுகளை அரசு ஆய்வுசெய்து பாதுகாக்க பொதுமக்கள் கோரிக்கை.;

Update: 2025-06-23 02:20 GMT
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள செல்க்கரசல் கிராமத்தில் நூற்றாண்டு பழமையான செப்புத் திருமேனிகள் மற்றும் சோழர் கால கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை, அந்த காலத்தில் சிவன் கோவிலுக்காக வழங்கப்பட்ட நில வருவாயை குறிக்கும் முக்கியமான சான்றுகளாகக் கருதப்படுகின்றன. கல்வெட்டுகள் வீடுகள் மற்றும் குளக்கரைகள் உள்ளிட்ட இடங்களில் பரவலாக கிடைக்கின்றன. அவற்றை ஊர் மக்கள் சேகரித்து, கோவிலில் பாதுகாத்து வருகின்றனர். சோழர் பேரரசர்கள் வீர ராஜேந்திர சோழன் மற்றும் விக்ரம சோழன் வழங்கிய கொடைகள் குறித்த பதிவுகளும் இதில் உள்ளன. இந்த இடத்தில் கீழடி போன்ற தொன்மையான நாகரிகம் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. அரசு ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும் என உள்ளூர் வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், கல்வெட்டுகள் ஆவணப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Similar News