கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூரில் அரசு மருத்துவக்கல்லுாரி மற்றும் மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், கச்சிராயபாளையம், தியாகதுருகம், சின்னசேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் நாள்தோறும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். அரசு மருத்துவமனைக்கு இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வருவோர் வளாகத்தில் தாறுமாறாக நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால், மருத்துவமனைக்கு வந்து செல்லும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் அந்த வழியாக செல்வதில் பெரும் இடையூறு ஏற்படுகிறது.