புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அண்ணாநகரைச் சேர்ந்தவர் கண்ணன் (47). இவர் ஆலங்குடி மல்லிகா தியேட்டர் பேருந்து நிறுத்தம் அருகே குட்கா பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்தார். இதனையடுத்து அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஆலங்குடி போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 420 கிராம் மதிப்புள்ள குட்கா பொருளையும், ரூ.420-யும் பறிமுதல் செய்து பிணையில் விடுவித்தனர்.