கறம்பக்குடி அடுத்த திருமணஞ்சேரி மயிலாடி தெருவைச் சேர்ந்தவர் மதியழகன் (60). இவர் மயிலாடி தெருவில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டிருந்தார். இதனையடுத்து வந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கறம்பக்குடி போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 26 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து பிணையில் விடுவித்தனர்.