புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் ஜீவா நகரை சேர்ந்தவர் சூர்யா (19). இவர் இலுப்பூர் - புதுக்கோட்டை சாலையில் நவம்பட்டி பெட்ரோல் பங்க் அருகே சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்டிருந்தார். இதனையடுத்து அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலுப்பூர் போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 26 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து பிணையில் விடுவித்தனர்.