சிவியபாளையத்தில் வயிற்று வலியால் அவதிப்பட்ட முதியவர் விஷ மாத்திரை உட்கொண்டு தற்கொலை.

சிவியபாளையத்தில் வயிற்று வலியால் அவதிப்பட்ட முதியவர் விஷ மாத்திரை உட்கொண்டு தற்கொலை.;

Update: 2025-06-23 10:12 GMT
சிவியபாளையத்தில் வயிற்று வலியால் அவதிப்பட்ட முதியவர் விஷ மாத்திரை உட்கொண்டு தற்கொலை. கரூர் மாவட்டம் , மன்மங்கலம் தாலுக்கா,மேற்கூர் பகுதியைசேர்ந்தவர் சதாசிவம் வயது 60. கடந்த இரண்டு வருடங்களாகவே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொண்டும் அவருக்கு குணமாகவில்லை. இதனால் விரக்தி மனப்பான்மையில் வாழ்ந்து வந்த சதாசிவம் ஜூன் 21ஆம் தேதி மாலை 5 மணி அளவில் விஷமாத்திரை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அவரை மீட்டு கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆயினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் அறிந்த சதாசிவத்தின் மகன் கார்த்திக் வயது 29 என்பவர் அளித்த புகாரில் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் உயிரிழந்த சதாசிவத்தின் உடலை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கிற்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வாங்கல் காவல்துறையினர்.

Similar News