ஆண்டாள் கோவில் புதூரில் பணம் வைத்து சூதாடிய மூன்று பேர் கைது.

ஆண்டாள் கோவில் புதூரில் பணம் வைத்து சூதாடிய மூன்று பேர் கைது.;

Update: 2025-06-23 10:58 GMT
ஆண்டாள் கோவில் புதூரில் பணம் வைத்து சூதாடிய மூன்று பேர் கைது. கரூர் காவல் எல்லைக்குட்பட்ட ஆண்டாங்கோவில் புதூர் பகுதியில் பணம் வைத்து சூது ஆடுவதாக காவல் உதவி ஆய்வாளர் நாகராஜனுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் ஜூன் 22ஆம் தேதி மதியம் 12 மணி அளவில் ஆண்டாங் கோவில் கிழக்கு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அருகில் உள்ள மதுரை வீரன் கோவில் அருகே பணம் வைத்து சூதாடியது கண்டறியப்பட்டு , இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட ஆண்டாங் கோவில் புதூரை சேர்ந்த பழனிச்சாமி , ஆறுமுகம் ,பிரதாப் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து , அவர்கள் சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும் , ரூ.150 பறிமுதல் செய்தனர். மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்த கரூர் மாநகர காவல் துறையினர் பின்னர் அவர்களை காவல் நிலைய பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

Similar News