கிருஷ்ணகிரி: பாறைகளை வெட்டுவதற்கு பயன் படுத்திய பொக்லைன் வாகனம்-டிராக்டர் பறிமுதல்.
கிருஷ்ணகிரி: பாறைகளை வெட்டுவதற்கு பயன் படுத்திய பொக்லைன் வாகனம்-டிராக்டர் பறிமுதல்.;
கிருஷ்ணகிரி மாவட்ட சுரங்கம் மற்றும் கனிமங்கள் துறை சிறப்பு தாசில்தார் பாரதி மற்றும் அதிகாரிகள் இட்டிக்கல் அகரம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி அருகே ரோந்து பணியில் ஈபட்டனர். அப்போது புறம்போக்கு நிலத்தில் இருந்த பாறைகளை வெட்டியது கண்டுபிடிக்கபட்டது. இதை தொடர்ந்து அதிகாரிகள், பொக்லைன் வாகனம் மற்றும் டிராக்டரை ஆகியவற்றை பறிமுதல் செய்து கிருஷ்ணகிரி தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்களை தேடி வருகிறார்கள்.