கிருஷ்ணகிரி: த.வெ.க.சார்பில் இளைஞர் அணி சார்பில் மாபெரும் இரத்ததான முகாம்.

கிருஷ்ணகிரி: த.வெ.க.சார்பில் இளைஞர் அணி சார்பில் மாபெரும் இரத்ததான முகாம்.;

Update: 2025-06-23 11:31 GMT
தமிழக வெற்றி கழகத்தின் இளைஞர் அணி சார்பில் மாபெரும் இரத்ததான முகாம் கிருஷ்ணகிரி மத்திய மாவட்டம் வேப்பன ஹள்ளி ஒன்றிய தமிழக வெற்றி கழகத்தின் இளைஞர் அணி சார்பில் தமிழக வெற்றி கழகத்தின் நிறுவனர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு மக்கள் நல நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட அமைப்பாளர் லேகேஷ் ஆகியோரின் வழிக்காட்டுதன் படி நடைப்பெற்ற இந்த விழாவின் போது நாரலப்பள்ளி கிராமத்தில் இலவச மருத்துவ முகாம் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் மாபெரும் இலவச இரத்ததான முகாம் நடைப்பெற்றது. இந்த முகாம்மில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களது இரத்தத்தினை மருத்துவமனைக்கு தானமாக வழங்கினார்கள். இதில் ஏராளமானவர்கள் கலந்துக்கொண்டனர்.

Similar News