கிருஷ்ணகிரி: தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர் சங்கத்தின் சார்பாக மாணவ, மாணவிகளை பாராட்டு விழா
கிருஷ்ணகிரி:தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர் சங்கத்தின் சார்பாக மாணவ, மாணவிகளை பாராட்டு விழா;
கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர் சங்கம் மற்றும் ஸ்ரீ சிறு நீலகண்டர் கல்வி அறக்கட்டளை சார்பில் கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைப்பெற்ற விழாவில் 23-ம், ஆண்டு நடந்து முடிந்த 10 வகுப்பு. 11 வகுப்பு மற்றும் 12 ம் வகுப்புகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களைக அறக்கட்டளையின் தலைவர் பிரம்மஸ்ரீ வெங்கடேஸ்வ சுவாமிகள் நடந்து முடிந்த அரசு பொது தேர்வு முடிவில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 10ம் பவகுப்பு, 11ம் வகுப்பு. மற்றும் 12-ம் வகுப்புகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளை பாராட்டி அவர்களுக்கு பொன்னாடை போர்த்தியும், பதக்கம் மற்றும் சான்றிதழ்,மற்றும ஊக்கத் தொகையும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.