கிருஷ்ணகிரி மவட்டம் பேரிகை அருகேயுள்ள அமுதகொண்டப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் முனிராஜ் இவருடைய மகள் ஷிராவாணி(19) இவர் கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.காம்., 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து சென்றவர். மீண்டும் வீட்டிற்கு வரவில்லை என்று அவரது தந்தை பேரிகை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் கே.என்., தொட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி விக்ரம்(20) என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் மாணவியை தேடி வருகிறார்கள்.