மொட்டை மாடியில்இருந்து விழுந்து சிறுவன் உயிரிழன்தான்
ஆவடியில் காத்தாடி பிடிக்க எதிர்வீட்டின் இரண்டாவது மாடிக்குச் சென்ற சிறுவன் மொட்டை மாடியிலிருந்து தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே பலி. ஆவடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை.;
ஆவடியில் காத்தாடி பிடிக்க எதிர்வீட்டின் இரண்டாவது மாடிக்குச் சென்ற சிறுவன் மொட்டை மாடியிலிருந்து தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே பலி. ஆவடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை. திருவள்ளூர் மாவட்டம் ஆவடி, ராமலிங்கபுரம், ஒன்றாவது தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார். வ/40 ஆட்டோ டிரைவர்.இவரது மனைவி எமிலியம்மாள்/36. இவர்களுக்கு மூன்று மகள் மற்றும் மகன் உள்ளான். அவரது மகன் கார்த்திக்/10 ஆவடியில் உள்ள தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தான். கார்த்திக் தாய் எமிலியம்மாள் உடன் அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பிரார்த்தனை கூட்டத்திற்கு சென்றான். எமிலியம்மாள் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்க,கார்த்திக் இரண்டாவது மாடியில் சிறுவர்களுடன் விளையாடி கொண்டிருந்தான். அப்போது,காத்தாடி ஒன்று பறந்து வந்து மரத்தில் சிக்கி கொண்டு கொண்டது. இதனை கண்ட கார்த்திக் காத்தாடி எடுக்க முயற்சி செய்துபோது திடீரென மாடியில் இருந்து தவறி கார்த்திக் கீழே விழுந்துள்ளான். கார்த்திக் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த தாய் எமிலியம்மாள் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். இந்நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி கார்த்திக் பரிதாபமாக உயிரிழந்தான்.ஆவடி காவல்துறையினர் கார்த்திக் உடலை கைப்பற்றிய பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காத்தாடி பிடிக்க சென்ற சிறுவன் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..