அம்பேத்கர் மக்கள் இயக்கம் பேரில் அராஜகம் செய்யும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அம்பேத்கர் மக்கள் இயக்கம் பேரில் அராஜகம் செய்யும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.;

Update: 2025-06-23 15:09 GMT
அம்பேத்கர் மக்கள் இயக்கம் பேரில் அராஜகம் செய்யும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கரூர் மாவட்டம், புலியூர் பேரூராட்சி வெள்ளாப்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் அதே பகுதியில் வசிக்கும் ரவிச்சந்திரன் என்பவர் தான் ஒரு சமூக ஆர்வலர் என்று சொல்லிக்கொண்டு பல்வேறு வகையில் கிராம மக்களுக்கு துன்புறுத்தல் ஏற்படுத்தி அச்சுறுத்தி வருவதாக கரூர் பசுபதி பாளையம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர். இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் சக்திவேல் செய்தியாளரிடம் தெரிவிக்கும் போது, அம்பேத்கர் மக்கள் இயக்கம் என்ற பெயரில் பல்வேறு மோசடிகள் நடத்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பு குண்டர் சட்டத்தில் போலீசாரல் கைது செய்யப்பட்டு தற்பொழுது சிறையில் இருந்து ரவிச்சந்திரன் என்பவர் வெளியே வந்துள்ளார். இவர் அப்பகுதி மக்களை மிரட்டி பணம் பறிப்பதோடு,அவர்கள் மீது பல்வேறு அவதூறு குற்றசாட்டுகளை வேண்டுமென்றே பரப்பி வருகிறார். இதனால் இப்பகுதி மக்கள் பெறும் மன அழுத்தத்திற்க்கு ஆளாகியுள்ளனர். புலியூர் வெள்ளாப்பட்டி கிராம மக்கள் ரவிச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்க கோரி பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் இன்று புகார் கொடுத்துள்ளனர். இந்த புகார் குறித்து நடவடிக்கை எடுக்க வில்லையென்றால், அப்பகுதி மக்களுடன் விடுதலை சிறுத்தை கட்சி இணைந்து புலியூரில் சாலை மறியல் போராட்டங்களை நடத்துவோம் என தெரிவித்தார். உடன் விடுதலை சிறுத்தை கட்சியின் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் புகழேந்தி, முக்கிய நிர்வாகிகள் இருந்தனர்.

Similar News