கும்பகோணத்தில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்

குடிநீர்;

Update: 2025-06-23 16:13 GMT
கும்பகோணம் மாநகர பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் காரணமாக ஜூன் 24 (செவ்வாய்க்கிழமை) குடிநீா் விநியோகம் நிறுத்தப்படுகிறது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் மு.காந்திராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கும்பகோணம் மாநகராட்சி பகுதிக்கு குடிநீா் விநியோகம் தரும் குடிதாங்கி நீரேற்று நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது. அதன் காரணமாக செவ்வாய்க்கிழமை ஒரு நாள் மட்டும் மாநகர பகுதிக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

Similar News