தண்ணீர் லாரி கவிழ்ந்து வாலிபர் உயிரிழப்பு: கோவையில் பரபரப்பு!

தண்ணீர் லாரி சாலையின் ஓரத்தில் நின்றிருந்த வாலிபரின் மீது கவிழ்ந்து விபத்தை ஏற்படுத்தியது.;

Update: 2025-06-24 00:48 GMT
அவிநாசி சாலையில் ஹோப்ஸ் சிக்னல் அருகே அமைந்துள்ள ஜி.ஆர்.டி கல்லூரி அருகே நேற்று மிகக் கோரமான விபத்து நிகழ்ந்தது. சி.ஏ.ஐ கார் ஷோரூமில் பணியாற்றிய பிரசாந்த் என்ற வாலிபர், ஷோரூம் முன்பு நின்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த தண்ணீர் லாரி அவர் மீது கவிழ்ந்தது. இந்த துயரான விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்து போலீசார் மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, கிரேன் உதவியுடன் லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். கோவை மத்திய போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Similar News