வாய்க்கால் தோண்டுவதற்கான பூமி பூஜையில் எம் எல் ஏ
மதுரை வாழை தோப்பு பகுதியில் வாய்க்கால் தோன்றும் பணிக்கான பூமி பூஜை எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது;
மதுரையை தெற்கு தொகுதிக்குட்பட்ட 46 வது வார்டு வாழை தோப்பு பகுதியில் பூமிநாதன் எம்எல்ஏ தலைமையில் வாய்க்கால் தோண்டும் பணிக்கான பூமி பூஜை நேற்று (ஜூன்.23) நடைபெற்றது. உடன் கவுன்சிலர் விஜயலட்சுமி பாண்டியன், உதவி செயற் பொறியாளர் மயிலேறிநாதன், திமுக, மதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.