ஊத்தங்கரை: குட்கா பொருட்கள் பறிமுதல் ஒருவர் கைது.
ஊத்தங்கரை: குட்கா பொருட்கள் பறிமுதல் ஒருவர் கைது.;
கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை அருகே உள்ள கல்லூர் பகுதியை சேர்ந்தவர் குமார் (32) இவர் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருட்களைப் பதுக்கி வைத்து விற்பதாக ஊத்தங்கரை போலீசாருக்கு தகவல் வந்ததின் பேரில் போலீசார், அவருடைய வீட்டில் சோதனையிட்டதில் அங்கு 8 மூட்டை குட்கா புகையிலை இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து குமாரை கைது செய்து, அவரிடமிருந்து குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.