உழவரை தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்டம்

திட்டம்;

Update: 2025-06-24 03:18 GMT
சங்கராபுரம் வேளாண் துறை சார்பில் உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்ட நிகழ்ச்சி நடந்தது. புத்திராம்பட்டு கிராமத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஊராட்சி தலைவர் கலையரசி பெரியசாமி தலைமை தாங்கினார். வேளாண் உதவி இயக்குநர் ஆனந்தன் முன்னிலை வகித்தார். வேளாண் துறை திட்டங்கள், மானிய விபரங்கள், இயற்கை விவசாயம், உழவன் செயலியின் பயன்பாடுகள், மண்வள மேம்பாடு, பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டம், சொட்டுநீர் பாசன திட்டம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. தோட்டக்கலை அலுவலர் ேஷாபனா தோட்டக்கலை துறை திட்டங்கள் குறித்து பேசினார்.

Similar News