கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
கோவை ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2025-26 கல்வியாண்டுக்கான முழுநேர பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 20, 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.;
கோவை ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2025-26 கல்வியாண்டுக்கான முழுநேர பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 20, 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் www.tncu.tn.gov.in இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு கோவை சாய்பாபா மிஷன் அருகே உள்ள ராமலிங்கம் நிலைய அலுவலகத்தை அணுகலாம் என முதல்வர் தெரிவித்தார்.