பேஸ்புக் பதிவு திமுக வட்ட செயலாளர் மீது புகார்
தகாத வார்த்தைகளில் திட்டி பேஸ்புக் பதிவு : திமுக வட்ட துணை செயலாளர் மீது அதிமுக கவுன்சிலர் புகார்;
தகாத வார்த்தைகளில் திட்டி பேஸ்புக் பதிவு : திமுக வட்ட துணை செயலாளர் மீது அதிமுக கவுன்சிலர் புகார் தனது புகாரே தாமதமாக விசாரிக்கப்படுகிறது என்றால் மக்களின் புகாருக்கு என்ன நடவடிக்கை : அதிமுக கவுன்சிலர் கேள்வி சென்னை மதுரவாயல் 145 ஆவது வார்டு அதிமுக கவுன்சிலர் சத்தியநாதன் தங்கள் பகுதி மக்களுடன் இணைந்து மதுரவாயலில் உள்ள துணை ஆணையர் அலுவலகத்திற்கு வந்து புகார் மனு அளித்தார். சமீபத்தில் அவர் வெளியிட்ட முகநூல் பதிவு ஒன்றில் திமுக நிர்வாகி ஒருவர் ஆபாசமாக கமெண்ட் செய்து தொடர்பாக இந்த புகார் மனு வழங்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கவுன்சிலர் சத்தியநாதன், "கடந்த 18ஆம் தேதி நொளம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நெற்குன்றம் பகுதி மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை கொடுத்திருந்தேன். அது தொடர்பாக முகநூலில் பதிவு செய்திருந்தேன். அந்தப் பதிவிற்கு கமெண்ட் செய்துள்ள திமுக வட்ட துணை செயலாளர் தகாத வார்த்தைகளில் வசைப்பாடி பதிவு செய்திருந்தார். இதுதொடர்பாக கோயம்பேடு கே 10 காவல் நிலையத்தில் நெற்குன்றம் பகுதி மக்கள் புகார் அளித்திருந்தனர். அந்தப் புகாருக்கு உரிய முறையில் பதில் அளிக்கப்படவில்லை என்பதால் இன்று சென்னை மாநகராட்சி ஆணையரிடம் புகார் மனு அளிக்க சென்றேன். அப்போது என்னை தொடர்பு கொண்ட துணை ஆணையர் தன்னிடம் வந்து புகார் அளிக்குமாறு தெரிவித்தார். அதன்படி மதுரவாயல் காவல் நிலையத்தில் உள்ள துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளேன். புகாரை ஏற்றுக் கொண்டதாக சான்றிணை வழங்கியுள்ளார். இது தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறேன். இருப்பினும் கவுன்சிலர் ஆகிய என்னை சமூக வலைதளத்தில் தகாத வார்த்தைகளில் பேசியவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாத சூழல் இருக்கிறது என்றால் சாமானிய மக்களுக்கு என்ன நிலைமை இருக்கும். குறிப்பாக என்னை தகாத வார்த்தைகளில் முகநூல் பக்கத்தில் திட்டிய நபரை இந்த தொகுதியின் முக்கிய புள்ளி ஒருவர் காப்பாற்றுகிறார். இதுவே அதிமுகவாக இருந்திருந்தால் இது போல் பதிவிட்ட நபர் உடனடியாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இருப்பார். ஆனால் இவர்கள் அந்த நபரை காப்பாற்ற பார்க்கிறார்கள் இதுதான் திமுக என்று தெரிவித்தார்.