புளியமரம் பஸ் ஸ்டாப்பில் நடந்து சென்ற மூதாட்டி மீது டூவீலர் மோதி விபத்து.
புளியமரம் பஸ் ஸ்டாப்பில் நடந்து சென்ற மூதாட்டி மீது டூவீலர் மோதி விபத்து.;
புளியமரம் பஸ் ஸ்டாப்பில் நடந்து சென்ற மூதாட்டி மீது டூவீலர் மோதி விபத்து. கரூர் மாவட்டம் , வெங்கமேடு , காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சின்னப்பன் மனைவி மேரி வயது 75. இவர் ஜூன் 21 ஆம் தேதி இரவு 10:10 மணி அளவில் கரூர் - வேலூர் சாலையில் நடந்து சென்றார். புளியமரம் பஸ் ஸ்டாப் அருகே வந்த போது எதிர் திசையில் டூவீலரில் வேகமாக வந்த நபர் நடந்து சென்ற மேரி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக மேரி அளித்த புகாரில் டூவீலர் ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வெங்கமேடு காவல்துறையினர்.