கிருஷ்ணகிரிதூய பாத்திமா அன்னை திருத்தலத்தில் சிறப்பு ஆராதனை.

கிருஷ்ணகிரிதூய பாத்திமா அன்னை திருத்தலத்தில் சிறப்பு ஆராதனை.;

Update: 2025-06-24 13:09 GMT
கிருஷ்ணகிரிதூய பாத்திமா அன்னை திருத்தலத்தில் சிறப்பு ஆராதனை. கிருஷ்ணகிரியில் அமைந்துள்ள தூய பாத்திமா அன்னை திருத்தலத்தில் உலக அமைதியும், சமாதானமும் வேண்டி சிறப்பு நற்கருணை ஆராதனை பவணி. பங்குத்தந்தை அருள்ராஜ் தலைமையில் நடைபெற்றது. சாந்தி நகரில் அமைந்துள்ள, மாதா இருதய சபை கன்னியர் மடத்தில் முதல் மேடை அமைத்து, நற்கருணை ஆராதனை மற்றும் ஆசீர்வாதம் நடைபெற்றது. பின்னர், நற்கருணை நாதரை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தின் மூலம் ஊர்வலமாக புனித அன்னள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த இரண்டாவது மேடைக்கு கொண்டுவந்து அங்கும் நற்கருணை ஆராதனையும், ஆசீர்வாதமும் வழங்கப்பட்டது. இறைமக்களுக்கு இறுதி ஆசீர்வாதத்தை வழங்கினார். இதில் கிறிஸ்தவ மக்கள் திரளாக கலந்துக்கொண்டனர்.

Similar News