கிருஷ்ணகிரி: செவிலியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.

கிருஷ்ணகிரி: செவிலியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.;

Update: 2025-06-24 13:29 GMT
இன்று கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பொதுசுகாதாரத் துறை துணை இயக்குநர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச்செயலாளர் விஜயா தலைமை தாங்கினார். அப்போது காலியாக உள்ள கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களை நிரப்பி கிராம சுகாதார செவிலியர்கள் மூலமாக தடுப்பூசி செலுத்தும் பணிகளை தொடர்ந்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோசங்களை எழுப்பினர். இதில் ஏராளமான செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

Similar News