தீயணைப்பு நிலையம் அமைக்க இடம் ஆய்வு

குமாரபாளையம் அருகே தீயணைப்பு நிலையம் அமைக்க இடம் ஆய்வு.;

Update: 2025-06-24 13:48 GMT
குமாரபாளையம் அருகே தீயணைப்பு நிலையம் அமைக்க இடம் ஆய்வு.வெப்படை பகுதியில் கூட்டுறவு சங்க கிடங்கு கட்டிடத்தில் செயல்பட்டு வரும் தீயணைப்பு நிலைய அலுவலகத்தை சொந்த இடத்திற்கு மாற்றுவதற்காக பல இடங்கள் ஆய்வு செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று குமார பாளையம் அருகே சௌதாபுரம் ஊராட்சியில் பேரிடர் மேலாண்மை துறை சார்பாக வெப்படை மையமாகக் கொண்டு குமாரபாளையம் தொகுதிக்குட்பட்ட புதிதாக அமைய உள்ள தீயணைப்பு நிலையம் அலுவலகம் கட்டிடம் மற்றும் தீயணைப்பு துறை அலுவலர் மற்றும் காவலர் குடியிருப்பு கட்டிடம் அமைய உள்ள பகுதியில் மாவட்ட வருவாய் அலுவலர், சுமன் தாசில்தார் சிவக்குமார் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் புனிதா ஆகியோருடன் பள்ளிபாளையம் பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் நாச்சி முத்து அவர்கள் அப்பகுதியை பார்வையிட்டனர். உடன் மாவட்ட அறங்காவலர் நியமனக்குழு உறுப்பினர் .சௌந்தரம் அவர்கள் மற்றும் ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர் ஜெயந்தி சம்பத் ஆகியோர் உடன் இருந்தனர்..

Similar News