பத்ம விபுஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ விருதுகள் பெற தகுதியான நபர்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்

பத்ம விபுஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ விருதுகள் பெற தகுதியான நபர்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்;

Update: 2025-06-24 14:12 GMT
ஒன்றிய அரசு சார்பாக மேன்மை பொருந்திய பணிகளுக்காக இந்திய அரசாங்கம் பத்ம விருதுகளை (பத்ம விபுஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ) வழங்க  அறிவித்துள்ளது.             கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், கல்வி, தொழில் நுட்பம், சமூக நலன், பொதுப்பணிகள்,  தொழில்  மற்றும் இதர பிரிவுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் அசாதாரணமான  பணிகள் ஆற்றியவர்களுக்கு வருகிற 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள குடியரசுதின விழா அன்று பத்ம விருதுகள் வழங்க  அறிவிக்கப்பட்டுள்ளது.  இவ்விருதுகள்  தொழில்,  இனம்,  உத்தியோகம், பாலினம் ஆகியவற்றிற்கு வித்தியாசமின்றி வழங்கப்படுகிறது.         மேலும்,  விவரங்கள் அறிய https://awards.gov.in மற்றும் https://padmaawards.gov.in  என்ற இணையதளத்தில்  விளையாட்டு துறைக்குட்பட்ட விண்ணப்பங்கள் மட்டும் பூர்த்தி செய்துவிட்டு அதன் 3 நகல்களை 27.06.2025- ஆம் தேதிக்குள்  மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர்  நலன் அலுவலர், விருதுநகர் மாவட்டம் அவர்களுக்கு தகுதியுள்ளவர்கள் நேரில் வந்து சமர்பிக்கவேண்டும்.  தேர்வு செய்யப்படும் விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் பரிந்துரைகளுடன் அரசுக்கு அனுப்பிவைக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

Similar News