திருநங்கைகளுக்காக நடைபெற்ற சிறப்பு முகாமில் மருத்துவ காப்பீட்டு அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் பெயர் திருத்தம், மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு சேவைகள்

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் இன்று (24.06.2025) நடைபெற்றது. இந்த முகாமில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்துகொண்டனர். இச்சிறப்பு முகாமில் திருநங்கை அடையாள அட்டை வழங்குதல், ஆதார் அட்டை வழங்குதல், ஆதார் அட்டையில்;

Update: 2025-06-24 16:47 GMT
பெரம்பலூர் மாவட்டம் திருநங்கைகளுக்காக நடைபெற்ற சிறப்பு முகாமில் மருத்துவ காப்பீட்டு அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் பெயர் திருத்தம், மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு சேவைகள் பெற்று திருநங்கைகள் பயன் பெற்றனர். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் இன்று (24.06.2025) நடைபெற்றது. இந்த முகாமில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்துகொண்டனர். இச்சிறப்பு முகாமில் திருநங்கை அடையாள அட்டை வழங்குதல், ஆதார் அட்டை வழங்குதல், ஆதார் அட்டையில் திருத்தம், வாக்காளர் அடையாள அட்டை, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம், ஆயுஷ்மான் பாரத் அட்டை, திறன் மேம்பாட்டு பயிற்சி துறையின் மூலமாக வேலைவாய்ப்பு தொடர்பான திறன் பயிற்சி புதிதாக தொழில் தொடங்க ஆர்வம் உள்ளவர்களுக்காக மாவட்ட தொழில் மையம் மற்றும் தாட்கோ மூலமாக சிறப்பு கடன் உதவி போன்ற பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டது இச் சேவைகள் தொடர்பாக 20 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணும் வகையில், தகுதியுடைய மனுக்களை கண்டறிந்து, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டம் அட்டை பெற விண்ணப்பித்த 5 திருநங்கைகளுக்கு உடனடியாக மருத்துவ காப்பீட்டு அட்டைகளையும், 5 திருநங்கைகளுக்கு புதியதாக வாக்காளர் அடையாள அட்டையினையும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வைத்தியநாதன் வழங்கினார். மேலும், திருநங்கைகளுக்கு சுய தொழில் செய்திட மானியம், சுயதொழில் பயிற்சி, வேலைவாய்ப்பு பயிற்சி, வீடு இல்லாத திருநங்கைகளுக்கு வீடு வழங்கிடவும் மற்றும் வீட்டுமனை இல்லாத திருநங்கைகளுக்கு வீட்டுமனை வழங்கிடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவத்துறை மூலம் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு திருநங்கைகளுக்கான அறுவை சிகிச்சை செய்த சான்று வழங்கப்பட்டது. 4 திருநங்கைகளுக்கு வாக்காளர் அட்டை திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. 20 நபர்கள் தொழில் பயிற்சி எடுக்கவும் முன்வந்துள்ளனர். இம்முகாமில் வருவாய் துறை, மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், தாட்கோ, மாவட்ட வழங்கல் அலுவலகம், எல்காட், வட்டார வளர்ச்சி அலுவலகம், கல்வித்துறை, மருத்துவத்துறை, மகளிர் திட்டம், ஊரக வேலை வாய்ப்பு பயிற்சி மையம், மாவட்ட தொழில் மையம், ஆகிய அரசுத்துறைகள் கலந்துகொண்டு தங்களது துறை சார்பில், திருநங்கைகளுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனர். இம்முகாமில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளுக்கு மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமை திருநங்கைகளுக்கான குறைதீர்க்கும் முகாம் நடைபெறும் என மாவட்ட சமூக நல அலுவலர் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் மாவட்ட சமூக நல அலுவலர் புவனேஸ்வரி, உதவி திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) பெர்லினா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News