கோவை: பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்த இளைஞர் கைது !
இணையத்தில் இருந்து பெண்களின் புகைப்படங்களை திருடி, அவற்றை மோர்பிங் செய்து ஆபாசமாக மாற்றி இன்ஸ்டாகிராமில் பதிவேற்றிய இளைஞர் கைது.;
இணையத்தில் இருந்து பெண்களின் புகைப்படங்களை திருடி, அவற்றை மோர்பிங் செய்து ஆபாசமாக மாற்றி இன்ஸ்டாகிராமில் பதிவேற்றிய செங்கல்பட்டு வீரபுரத்தைச் சேர்ந்த ராஜா (33) என்பவரை கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். போலி இன்ஸ்டாகிராம் ஐ.டி-யில் ஆபாசப் புகைப்படம் பதிவேற்றப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடைபெற்றது. இதில், ராஜா பெண்களின் புகைப்படங்களைத் திருடி, அவற்றை மரியாதைக்கேடான முறையில் மாற்றி பதிவிட்டதும், ஏராளமான பின்தொடர்பவர்களைச் சேர்த்ததும் தெரியவந்தது. இதையடுத்து, ராஜாவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.