திருச்சி மாவட்ட கலெக்டராக சரவணன் ஐஏஎஸ் பொறுப்பேற்பு
திருச்சி மாவட்ட கலெக்டராக பணியாற்றிய பிரதீப்குமார் பேரூராட்சிகள் இயக்குனராக பணியிட மாற்றம்;
திருச்சி மாவட்ட கலெக்டராக பணியாற்றிய மா.பிரதீப்குமார் பேரூராட்சிகள் இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக திருச்சி மாநகராட்சி ஆணையராக பணியாற்றிய வே.சரவணன் திருச்சி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார். அவர் இன்று(25-06-2025) திருச்சி மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர். கலெக்டராக பொறுப்பேற்றுக் கொண்ட அவர், பொது மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் குறைகளை தீர்க்க பாடுபடுவேன் என தெரிவித்தார். சரவணன் ஐஏஎஸ் இதற்கு முன்பு திருச்சி மாநகராட்சி ஆணையர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் இணை மேலாண்மை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்