கரூரில் கட்டிட பொறியாளர்களின் ஒருங்கிணைப்புக்கு புதிய நிர்வாகிகள் பதவியேற்பு.
கரூரில் கட்டிட பொறியாளர்களின் ஒருங்கிணைப்புக்கு புதிய நிர்வாகிகள் பதவியேற்பு.;
கரூரில் கட்டிட பொறியாளர்களின் ஒருங்கிணைப்புக்கு புதிய நிர்வாகிகள் பதவியேற்பு. கரூர் ஈரோடு சாலையில் உள்ள தனியார் விடுதியின் கூட்ட அரங்கில் கரூர் கட்டிட பொறியாளர்களின் ஒருங்கிணைப்பு சார்பில் 2025 28 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நேற்று மாலை தலைவர் சிவராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கரூர் காவல் ஆய்வாளர் மணிவண்ணன், தென்னிலை அருள் முருகன் கல்லூரி தாளாளர் கந்தசாமி அகில இந்திய கட்டுநர் சங்கமேனால் காப்பாளர் செல்வராஜ் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சங்கத்திற்கு 2025 - 28 ஆம் ஆண்டுக்கான புதிதாக தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் சிவ ராமகிருஷ்ணன் , செயலாளர் சிவக்குமார் , பொருளாளர் கோபிநாத் ,துணைத் தலைவர் சுகுமாரன் , இணை செயலாளர் குருமூர்த்தி , துணை செயலாளர் கார்த்திகேயன் , செயற்குழு தலைவர் சரத்குமார் ,சட்ட ஆலோசகர் மனோகரன் உள்ளிட்டவர்கள் புதிய நிர்வாகிகளாக பதவி ஏற்று கொண்டனர். அவர்களுக்கு சங்கத்தின் சார்பில் அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.