கீழமாயனூர்- நாடக மேடை அமைப்பதற்கான பூமி பூஜையில் பங்கேற்றார் எம் எல் ஏ.
கீழமாயனூர்- நாடக மேடை அமைப்பதற்கான பூமி பூஜையில் பங்கேற்றார் எம் எல் ஏ.;
கீழமாயனூர்- நாடக மேடை அமைப்பதற்கான பூமி பூஜையில் பங்கேற்றார் எம் எல் ஏ. கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழ மாயனூர் பகுதியில் 2025 -26 ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில்இருந்து ரூபாய் 8.75 லட்சத்தில் நாடக மேடை அமைப்பதற்கான பூமி பூஜை கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி மேற்கு ஒன்றிய செயலாளர் கட்டளை ரவி ராஜா உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் ஒப்பந்ததாரர் பொதுமக்கள் கலந்து கொண்டு பூமி பூஜையை விழாவை சிறப்பித்தனர். எம்எல்ஏ சிவகாமசுந்தரி பூமி பூஜை விழாவில் பங்கேற்று அதற்கான பணிகளை துவக்கி வைத்தார்.