ஆண்டிப்பட்டி கோட்டை அருகே டூவீலர்கள் மோதல். இளைஞர் படுகாயம்.
ஆண்டிப்பட்டி கோட்டை அருகே டூவீலர்கள் மோதல். இளைஞர் படுகாயம்.;
ஆண்டிப்பட்டி கோட்டை அருகே டூவீலர்கள் மோதல். இளைஞர் படுகாயம். கரூர் மாவட்டம் , அரவக்குறிச்சி தாலுகா , ஜங்கால்பட்டி காலனி பகுதியைச் சேர்ந்தவர் கவின் குமார் வயது 27 . ஜூன் 23ஆம் தேதி இரவு 11: 45 மணியளவில் கரூர் - திண்டுக்கல் சாலையில் ஆண்டிப்பட்டி கோட்டை பகுதியில் டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிர் திசையில் ஆண்டிப்பட்டி கோட்டை ,கேர் நகர் பகுதியைச் சேர்ந்த வீரமலை வயது 29 என்பவர் எதிர் திசையில் ஓட்டி வந்த டூ வீலர் கவின்குமார் டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயம் அடைந்த கவின்குமாரை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக கவின் குமாரின் உறவினர் கஸ்தூரி அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் டூவீலரை வேகமாகவும் , அஜாக்கிரதையாகவும் ஒட்டி விபத்து ஏற்படுத்திய வீரமலை மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் அரவக்குறிச்சி காவல் துறையினர்.