போச்சம்பள்ளி அருகே மனைவியை கொலை செய்த கணவன் கைது

போச்சம்பள்ளி அருகே மனைவியை கொலை செய்த கணவன் கைது;

Update: 2025-06-25 11:49 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் அங்கம்பட்டியைச் சோ்ந்தவா் கவியரசு (40).லாரி டிரைவர் இவரது மனைவி ஜெயமோகனா (29). தம்பதி இடையே ஏற்பட்டு கெங்கிநாயக்கன்பட்டி கிராத்தில் வசிக்கும் தனது தம்பி வீட்டிற்கு சென்றாா். இதை அறிந்த கணவன் கவியரசு அங்கு சென்று மனைவியை அழைத்துள்ளார். இதனால் மனைவியிடம் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த கவியரசு மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவி ஜெயமோகனாவை வெட்டினாா். உடனடியாக அவரை மீட்டு போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயமோகனா உயிரிழந்தாா். இதை தகவல் அறிந்த போச்சம்பள்ளி போலீசார் கவியரசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News