தேன்கனிக்கோட்டை அருகே டெம்போ மோதி விவசாயி உயிரிழப்பு.
தேன்கனிக்கோட்டை அருகே டெம்போ மோதி விவசாயி உயிரிழப்பு.;
கிருஷ்ணகிரி மவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பென்னங்கூர் அடுத்த அலேநத்தம் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (32) விவசாயியான. இவர் டூவீலரில் ஒசூர்- தேன்கனிக்கோட்டை சாலை பென்னங்கூர் அருகே சென்ற போது அந்த வழியாக வந்த டெம்போ வேன் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சந்தோஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தேன்கனிக் கோட்டை போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.