ஊத்தங்கரை பி.டி.ஒ அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம்.
ஊத்தங்கரை பி.டி.ஒ அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஊத்தங்கரை வட்டம் நொச்சிப்பட்டி கிராமத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள் ஏராளமானோருக்கு கடந்த ஆறு மாத காலமாக வேலை வழங்கப்படாததை கண்டித்து கண்டித்தும், உடனடியாக வேலை வழங்கிட கோரியும் கண்டன கோசம் எழுப்பப்பட்டது.