வருவாய்த்துறை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்...
வருவாய்த்துறை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்...;
விருதுநகரில் 500க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்... விருதுநகர் மாவட்டத்தில் வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தற்செயல் விடுப்பு எடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட வருவாய்த்துறை ஊழியர்கள் கலந்து கொண்ட போராட்டத்தில் வருவாய்த்துறையினருக்கு சிறப்பு பணிப்பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும், வருவாய் துறையில் காலிப்பணியிடங்களையும் விரைந்து நிரப்ப வேண்டும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் நில அளவைத்துறை ஆகியவற்றில் பணிபுரிந்து வரும் அனைத்து நிலையிலான அலுவலர்களின் பணித்தன்மை மற்றும் பணிப்பளுவை கருத்தில் கொண்டு அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.