சாத்தூர் மக்களின் நீண்ட கால கோரிக்கையான புதிய பேருந்து நிலைய கட்டிட பணிக்கான பூமி பூஜை செய்து தொடங்கி வைத்த தமிழக வருவாய்த்துறை அமைச்சர்.

சாத்தூர் மக்களின் நீண்ட கால கோரிக்கையான புதிய பேருந்து நிலைய கட்டிட பணிக்கான பூமி பூஜை செய்து தொடங்கி வைத்த தமிழக வருவாய்த்துறை அமைச்சர்.;

Update: 2025-06-25 14:43 GMT
சாத்தூர் மக்களின் நீண்ட கால கோரிக்கையான புதிய பேருந்து நிலைய கட்டிட பணிக்கான பூமி பூஜை செய்து தொடங்கி வைத்த தமிழக வருவாய்த்துறை அமைச்சர். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பிரதான பேருந்து நிலையம் ஆரம்பிக்கப்பட்டு சுமார் 60 ஆண்டுகளைக் கடந்த நிலையில் தற்பொழுது மிகவும் போக்குவரத்து நெரிசலாக இருப்பதாகவும் அதிக அளவில் பேருந்துகள் நிறுத்த வசதி இல்லாத காரணத்தால் புதிய பேருந்து நிலையம் வேண்டும் என்பது சாத்தூர் பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வந்த நிலையில் தற்பொழுது புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான பூமி பூஜையை தமிழக வருவாய் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். சுமார் 6 கோடியே 70 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ளதாகவும் இங்கு பல்வேறு வழித்தடங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார் அதனைத் தொடர்ந்து மேல காந்தி நகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட ஆரம்ப பள்ளியில் கட்டிடத்தையும் மாணவர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன் மற்றும் சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் சிவக்குமார் வட்டாட்சியர் ராஜ்குமார் மற்றும் சாத்தூர் நகர் மன்ற சேர்மன் குருசாமி மற்றும் அரசு அலுவலர்கள் கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Similar News