மதுபோதையில் ஏற்பட்ட பிரச்சனையில் தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற கூலி தொழிலாளியை அதே கத்தியை பறித்து கொலை செய்ய வந்த நபரையே குத்தி கொலை செய்த இளைஞர் நகர் காவல் நிலை
மதுபோதையில் ஏற்பட்ட பிரச்சனையில் தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற கூலி தொழிலாளியை அதே கத்தியை பறித்து கொலை செய்ய வந்த நபரையே குத்தி கொலை செய்த இளைஞர் நகர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்;
அருப்புக்கோட்டையில் மதுபோதையில் ஏற்பட்ட பிரச்சனையில் தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற கூலி தொழிலாளியை அதே கத்தியை பறித்து கொலை செய்ய வந்த நபரையே குத்தி கொலை செய்த இளைஞர் நகர் காவல் நிலையத்தில் சரணடைந்தார் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வெள்ளக்கோட்டை அண்ணாநகர் 4 வது தெருவை சேர்ந்தவர் நாகராஜன்(55). இவரது மகன் விக்னேஷ்(26). தந்தை மகன் இருவரும் பெயிண்டிங் வேலை செய்து வந்தனர். நாகராஜன் நண்பர் அருப்புக்கோட்டை மேலகண்டமங்கலம் பகுதியை சேர்ந்த முத்துக்குமார்(55) என்பவரும் நாகராஜ் உடன் பெயிண்டிங் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. முத்துக்குமார் அடிக்கடி நாகராஜன் வீட்டிற்கு வந்து தங்கி மது அருந்துவதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல முத்துக்குமார், நாகாராஜன் வீட்டிற்கு சென்று இருவரும் ஒன்றாக இணைந்து மது அருந்தினர். அப்போது இருவருக்கும் இடையே மதுபோதையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி முத்துக்குமார், கத்தியால் நாகராஜனை குத்த முயன்றுள்ளார். அப்போது வீட்டின் வெளியே அமர்ந்திருந்த நாகராஜன் மகன் விக்னேஷ் உள்ளே சென்று பார்த்த போது முத்துக்குமார் தனது தந்தை நாகராஜனை கத்தியால் குத்த முயன்றதை கண்டு அதிர்ச்சி அடைந்து முத்துக்குமாரை கீழே தள்ளிவிட்டு அவர் கையில் இருந்த கத்தியை பிடுங்கி முத்துக்குமாரை அதே கத்தியால் குத்தி விக்னேஷ் கொலை செய்து விட்டு தப்பி ஓடினார். மேலும் நாகராஜனும் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த வீட்டின் அருகே வசிக்கும் நாகராஜனின் அத்தை மாரியம்மாள் தனது வீட்டில் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து தனது வீட்டில் ஒருவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதாக நகர் காவல் நிலையத்திற்கு சென்று தகவல் அளித்துள்ளார். இதனை அடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் முத்துக்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் நேரில் விசாரணை மேற்கொண்டார். மேலும் கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்ததோடு மோப்பநாய் உதவிடனும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே முத்துக்குமாரை கத்தியால் குத்தி கொலை செய்த விக்னேஷ் நேராக நகர் காவல் நிலையத்தில் கத்தியுடன் சரணடைந்தார். மேலும் தந்தையை கொலை செய்ய முயன்றதால் முத்துக்குமாரை கொலை செய்ததாக அவர் ஒப்புக் கொண்டுள்ளார். இந்த கொலையை விக்னேஷ் மட்டும் செய்தாரா இல்லை அவருடன் சேர்ந்து நாகராஜனும் இந்த கொலைக்கு உடைந்தையா என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விக்னேஷ் மீது ஏற்கனவே கஞ்சா வழக்கு உள்ளிட்ட வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. பட்டப் பகலில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் அருப்புக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.