ஜூனியர் ரெட்கிராஸ் துணைக் குழு கூட்டம்
2025-26 ஆம் கல்வி ஆண்டுக்கான செயல்பாடுகள் வரையறை செய்யப்பட்டன.;
பெரம்பலூரில் ஜூனியர் ரெட்கிராஸ் துணைக் குழு கூட்டம் ஜூனியர் ரெட்கிராஸ் அமைப்பின் துணைக் குழு கூட்டம் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று (ஜூன் 25) மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செல்வகுமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2025-26 ஆம் கல்வி ஆண்டுக்கான செயல்பாடுகள் வரையறை செய்யப்பட்டன. மேலும் இதில், மாவட்ட கல்வி அலுவலர்கள், ரெட்கிராஸ் செயலாளர் இராதாகிருஷ்ணன், பொருளாளர் ஜோதிவேல், துணைக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.