பேராவூரணி அருகே வயலில் பாம்பு கடித்து விவசாயி பலி

விவசாயி பலி;

Update: 2025-06-25 18:06 GMT
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணிபேராவூரணி அருகே உள்ள வீரியங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கன் மகன் எம்.ஆர்.கணேசன் (65), விவசாயியான இவர் செவ்வாய்க்கிழமை மாலை, வீரியங்கோட்டையில் உள்ள தனது விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எள் வயலில் மறைந்திருந்த விஷப்பாம்பு அவரை தீண்டியது. இதில், வயலுக்குள் மயக்கம் அடைந்து கிடந்த எம்.ஆர்.கணேசனை அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் மீட்டு பேராவூரணி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு, மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.  இந்நிலையில் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை சுமார் 1 மணியளவில் எம்.ஆர்.கணேசன் உயிரிழந்தார். இதுகுறித்து பேராவூரணி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இறந்து போன கணேசனுக்கு மனைவி, ஒரு மகன், திருமணமான ஒரு மகளும் உள்ளனர்.  பாம்பு கடித்து விவசாயி உயிரிழந்த சம்பவம் இப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Similar News